Sponsor

Monday, May 24, 2021

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது....!

 


இன்று முல்லைத்தீவு கள்ளபாடு கடற்கரை பகுதியில் வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் தற்போது அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

இன்னிலையில் கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் மணலுக்குள் புதையுண்ட வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று கிராம வாசிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த கால போரின் போது வீசப்பட்ட குறித்த குண்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கடற்கரை மணலில் புதையுண்டு கணப்பட்டுள்ளது.

வெடிக்காத குண்டுதொடர்பில் கிராம வாசிகள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல்கொடுத்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் குண்டின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment