Sponsor

Friday, May 21, 2021

கிளிநொச்சியில் பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு....!



 கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 77 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - திருவையாறு பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணிடம் இறப்பின் பின்னர் பெறப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றய தினம் பரிசோதிக்கப்பட்டிருந்தது.

இதன்போதே உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த பெண்ணுடைய மகன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றுவதாக கூறியுள்ள சுகாதார பிரிவினர் அவரையும், பெண்ணின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் பெண்ணின் சடலம் உறவினர் ஒருவர் முன்னிலையில் வவுனியாவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment