Sponsor

Saturday, May 22, 2021

இந்தியாவில் பிளக் பங்கஸ் எனும் பூஞ்சை நோயால் 8,848 பேர் பாதிப்பு...!

  


இந்தியா முழுவதும் பிளக் பங்கஸ் நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மியூகோர்மைகோசிஸ் எனும் பிளக் பங்கஸ் மிகவும் அபாயகரமான, அரியவகை பங்கஸ். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக பிளக் பங்கஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிளக் பங்கஸ் நோய் பாதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக குஜராத்தில் 2,281 பேர், மராட்டியம் 2,000 பேர், ஆந்திரம் 910 பேர், மத்தியப்பிரதேசம் 720 பேர், ராஜஸ்தான் 700 பேர், கர்நாடகம் 500 பேர், தெலங்கானா 350, ஹரியானா 250, தமிழகத்தில் 48 பேர் உட்பட 24 மாநிலங்களில் பிளங் பங்கஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment