Sponsor

Friday, May 21, 2021

கிளிநொச்சியில் பேருந்தை திருப்பிய இளைஞர்கள் மீது இராணுவம் தாக்குதல்....!

 


கிளிநொச்சி ஆடை தொழிற்சாலைக்கு புறப்பட்ட பேருந்தை வழி மறித்த இளைஞர்களும் பெண்களும் சமூக பொறுப்போடு நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியதை அடுத்து அவர்கள் வீடுகளுக்கு திரும்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொரோனா தொற்று கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ளதனால் சில நாட்கள் வீடுகளில் இருக்குமாறு அவர்கள் பேருந்தின் சாரதியிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து சாரதி உடனே வாகனத்தை நிறுத்தி நிலையில் அனைவரும் வாகனத்தை விட்டு இறங்கி விட்டனர்.

இந்நிலையில்   அந்த இடத்துக்கு வந்த இராணுவம் இளைஞர்களை தாக்கியதுடன் பெண்களை தாக்க முற்பட்டதாக கூறப்படுகின்றது. இளைஞர்கள் இராணுவத்தால் தாக்கப்பட்டதையடுத்து அந்த இடத்திற்கு வந்த ஆடை தொழிற்சாலை நிர்வாகம் தாம் எவரையும் விருப்பம் இல்லாமல் வேலைக்கு அமர்த்தவில்லை எனவும் தமது தொழிற்சாலை சமூக பொறுப்போடு தொற்று நீக்கி பயன் படுத்தி மிகவும் அவதானமாக செயற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

எனினும்  தொழிற்சாலைக்கு புறப்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் வீட்டுக்கு திரும்ப நடந்து சென்று கொண்டிருந்த வேளை மிகவும் பொறுப்போடு வேரவில் வலைப்பாடு செல்பவர்களையும் கிராஞ்சியில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு ஏற்றி சென்றதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சமூக பொறுப்புணர்வோடு செயல்பட்ட இளைஞர்களை இராணுவம் எதற்காக தாக்கியது என சமூக ஆர்வர்கள் பல்லரும் விசனம் வெளியிட்டுள்ளனர். 






No comments:

Post a Comment