Sponsor

Friday, May 28, 2021

யாழில் இராணுவ சிப்பாயின் விபரீதமுடிவு....!

 


யாழ்ப்பாணம்- பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள விகாரைக்குள்ளேயே நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், வத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய், வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்தப் பெண், திடீரென தொடர்பினை துண்டித்தமையினால் இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளதாகவும் இராணுவத்தினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை, பி.சி.ஆர்.பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.   


No comments:

Post a Comment