Sponsor

Wednesday, May 26, 2021

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 66 பேருக்கு தொற்று!

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 66பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 45பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.



சிறைச்சாலையில் சில அறிகுறிகள் தென்பட்ட சிலருக்கு மாத்திரமே இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களை மேல் மாகாணத்தில் உள்ள வட்டரக்க சிறைச்சாலைக்கு சொந்தமான தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


​மேலும் இன்றுமட்டும் இதுவரை 55பேருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு நகலில் தொற்றுக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.​



No comments:

Post a Comment