Sponsor

Monday, May 31, 2021

தொடர்ந்தும் காவல்துறையினரின் விடுமுறைகள் இரத்து



பொலிஸாரின் விடுமுறையை ஜூன் 15 வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நிலைமையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையை மே 17முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

தொடர்ந்தும் பயண கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதால் பொலிசாரின் விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment