Sponsor

Wednesday, May 26, 2021

"இந்தியாவுக்கு மீண்டும் செல்ல பதட்டமாக உள்ளது" -மைக்கேல் ஹஸ்ஸி

 


கொரோனா தொற்றிலிருந்து மீண்டு ஆஸ்திரேலியா திரும்பியுள்ள சி.எஸ்.கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய வீரருமான மைக்கேல் ஹஸ்ஸி மீண்டும் இந்தியாவுக்கு செல்வதை நினைத்தால் பதட்டமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே இந்தியாவில் இந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளது.

ஆனால் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவிவருவதால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி, கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment