Sponsor

Wednesday, May 26, 2021

வவுனியாவில் ட்ரோன் கமராவின் உதவியுடன் பயணத் தடையை மீறுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!!

 


வவுனியாவில் ட்ரோன் கமராவின் உதவியுடன் பயணத் தடையை மீறுபவர்களுக்கு எதிராக விமானப்படையினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பயணத்தைடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி வீதிகளில் நடமாடுவோர், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் ஆகியோருக்கு எதிராக ட்ரோன் கமராவின் உதவியுடன் நாடு பூராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வவுனியாவில் இன்று (26.05) ட்ரோன் கமராவின் உதவியுடன் வைரவபுளியங்குளம், வவுனியா நகரம், கற்குழி, தேக்கவத்தை ஆகிய பகுதிகளில் விமானப்படையினரும், பொலிசாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தேக்கவத்தை பகுதியில் பயணத் தடையை மீறி ஒன்றுகூடி வீதிகளில் கலந்துரையாடியவர்கள் மற்றும் வீதிகளில் நடமாடியவர்கள் ஆகியோர் ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரும், விமானப்படையினரும் பலருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்தும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் ட்ரோன் கமராவின் உதவியுடன் விமானப் படையினரும், பொலிசாரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment