Sponsor

Friday, May 21, 2021

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து....!



 வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக்கூட்டு கோபுர சந்தியில் சென்றுகொண்டிருந்த போது குறித்த சந்தியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment