Sponsor

Monday, May 31, 2021

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்க பட்டது ....!



 கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின், கிளாலி பிரதேசத்தில் கொவிட் -19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 15 குடும்பங்களுக்கு, நேற்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.


புலப்பெயர் தேசத்தில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவரின் அன்பளிப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணியில் ‘பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் முத்துக்குமார் கஜன், உறுப்பினர்களான தவராசா ரமேஷ், கிருஷ்ணன் வீரவாகுதேவர் மற்றும் கிளாலி அமைப்பாளர்கள் செல்வராஜேஸ்வரன்‘கணுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment