Sponsor

Friday, May 28, 2021

மாஸ்க் அணியாத இளைஞரின் கை கால்களில் ஆணியடித்த காவலதுறை....!

 


இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கும் மிக பெரிய ஆயுதமாக முகக்கவசம் பார்க்கப்படுகிறது.

பொதுவெளியில் செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்க் அணியாத இளைஞரின் கை மற்றும் காலில் உத்தரப்பிரதேச போலீசார் ஆணியடித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பரெய்லி என்ற இடத்தில் வெளியே சென்ற 28 வயது ரஞ்சித் என்ற இளைஞன் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, சாலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு கிடந்த மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விசாரித்ததில் மாஸ்க் அணியாததால் பொலிசார், கை, கால்களில் ஆணி அடித்து அனுப்பியதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்,ஆனால், மாஸ்க் அணியாமல் ரஞ்சித் சாலையில் சுற்றித்திரிந்ததாகவும் தட்டிக் கேட்ட போலீசில் திருப்பி தாக்கியதுடன் போலீசிடம் இருந்து தப்பிக்க தானே கை, காலில் ஆணி அடித்துக்கொண்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அத்துடன் குறித்த இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸ் கூறியுள்ளது.எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment