Sponsor

Friday, May 28, 2021

84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று....!

 


கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் 84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளாவர்கள் கராகொடை, கித்துல்கல, மத்தமகொட, பருசல்ல, கல்பஹத்த மற்றும் கபுலுமுள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment