Sponsor

Friday, May 21, 2021

கொரோனா காரணமாக பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....!

 


கொரோனா காரணமாக பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இறுதியாக கிடைத்த பிசிஆர் பரிசோதனை முடிவின் படி நேற்றையதினம் 52 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆறு நாட்களாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50க்கு மேற்பட்ட தாக காணப்படுகின்றது.

அதே நேரத்தில் மொத்தமாக 2277 நபர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலைமை காணப்படுகின்றது. இன்றும் ஒரு கொரோனா மரணம் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது அறியக்கூடியதாக வுள்ளது எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயி ரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையிலே பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தோணிபுரம் கிராமத்தினை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம். அதில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொடிகாமம் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 123 குடும்பங்களைச் சேர்ந்த 5249பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இடர் கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபா உணவு பொதி பிரதேச செயலகங்கள் ஊடாக அவை வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை பூராகவும் பயணத் தடை அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே பயணத்தடை காலப் பகுதியிலே பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து செயற்படவேண்டும்.

பயண தடையானது பொதுமக்களுடைய பாதுகாப்பினை உறுதி படுத்துவதற்காக தான் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இந்த பயணதடையினை அனுசரித்து செயற்பட வேண்டியது அவசியமாகும். பொதுமக்கள் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல ஒன்றுகூடல் நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வுகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் ஒன்றுகூடும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது.

தற்போது யாழில் மதகுருமார் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவதை நிறுத்த வேண்டும். பொது இடங்கள் அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயமாக முக கவசத்தினை சரியான முறையில் அணிந்து செல்ல வேண்டும். நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தேசிய ரீதியில் அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கியிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எமது மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியோர் எண்ணிக்கை தொடர்பில் அனுப்பியிருக்கிறோம் என்றும், அதன் அடிப்படையிலே யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் உட்பட சகல திணைக்கள உத்தியோகத்தர்களுமாக 3 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருக்கின்றோம். மிக விரைவில் அக் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மேலதிகமான இரண்டு இடங்களை நாங்கள் புதிதாக ஆரம்பித்துள்ளோம். அதாவது வட்டுக்கோட்டை மற்றும் நாவற்குழியில் 450 பேருக்கு மேற்பட்டோர் தங்க வைப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அந்த அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த வேலைகள் முடிவடைந்தவுடன் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும்.

இதைவிட 4 ஆதார வைத்திய சாலைகளிலும் ஒவ்வொரு விடுதிகள் நோயாளர்களை தங்க வக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு எமக்கு ஆளணி பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை முன்னரை விட தற்போது பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment