Sponsor

Monday, May 10, 2021

மேல் மாகாணத்தில் நேற்று 1,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று

 


நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 755 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதுடன், அந்த மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 39,079 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 323 பேருக்கும், களுத்துறையில் 234 பேருக்கும், காலியில் 228 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 127 பேருக்கும், இரத்தினபுரியில் 192 பேருக்கும், பொலன்னறுவையில் 118 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியானது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 52 பேரும், குருநாகலில் 59 பேரும், அநுராதபுரத்தில் 94 பேரும், மாத்தறையில் 87 பேரும், மாத்தளையில் 75 பேரும், நுவரெலியாவில் 55 பேரும், அம்பாறையில் 42 பேரும், மட்டக்களப்பில் 25 பேரும், பதுளையில் 32 பேரும், திருகோணமலையில் 14 பேரும் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment