Sponsor

Friday, May 14, 2021

ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் 33 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 


தனிமைப்படுத்த சட்டத்தை மீறி புத்தாண்டு வைபவத்தை நடத்திய இரத்தினபுரி கொலான்ன பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் 33 பெண்களுக்கு கோவிட் தொ ற்றியுள்ளது.

140 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 33 பேருக்கு கோ விட் தொ ற்றி இருப்பது உறுதியாகியதை அடுத்து ஆடைத் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு வைபவம் நடைபெற்று 10 தினங்களுக்கு பின்னர் ஏற்பட்ட சு கவீனம் காரணமாக சி கிச்சைக்காக கம்பஹாவில் உள்ள வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவருக்கு கோ விட் தொ ற்றி இருப்பது கண்டறியப்பட்டது.

மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை கடந்த 10 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment