Sponsor

Sunday, May 9, 2021

இலங்கையில் மேலும் 16 கிராமங்கள் முற்றாக முடக்கம்!

 


நாட்டில் 5 மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சேவர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் மஹர காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகெஹெல்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டான காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கே.சி.சில்வா கிராம சேவகர் பிரிவு மற்றும் கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவின் அட்டபகஹாவத்த கிராமம், கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவின் பேஷகர்ம கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வத்தளை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட சேதவத்தை கிராம சேவகர் பிரிவின் மஹா பமுனுகம பகுதி, குன்ஜகஹா வத்தை கிராம சேவகர் பிரிவின் 44ஆம் இலக்க தெரு, நில்சிறிகம கிராம சேவகர் பிரிவின் 3ஆம் மற்றும் 7ஆம் இலக்க தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நவமெதகம பகுதி, பக்மிதெனிய கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட ரன்ஹெலகம பகுதி, சேருபிட்டிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சேருபிட்டிய உப பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினப்புரி மாவட்டத்தின் இரத்தினப்புரி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட அங்கம்மான கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, களுத்துறை மாவட்டத்தின் மொரகஹாஹேன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பலன்னொறுவ, கொரலைகம, கும்புக்க மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹொரனை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நர்த்தனகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் மொனராகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பொஹிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, 

No comments:

Post a Comment